பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..
சிலருக்கு பசிக்கும்போது மட்டும் உணவு நினைவுக்கு வருகிறது. இது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். ஆனால், சிலர் பசி இல்லாமலேயே சாப்பிடுகிறார்கள். இது நோய்களின் அடையாளமாக முடியும்.
வாழ்க்கை முறை மாற்றம் உணவுப் பழக்கத்தையும் மாற்றி விட்டது. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுதல், அல்லது பசிக்காமலே ஏதேனும் கடித்து கொண்டிருப்பது உடலுக்கு தீங்கு.
உண்மையில், உடல் எப்போது உணவு தேவைப்படுகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. அதை கவனிக்காமல் ஆசைப்படும் உணவுகளைத் தேர்வு செய்வதால், அதிக எடை, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.
இளைஞர்களில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. பலர் டிவி, மொபைல் பார்க்கும்போது சாப்பிடுவதால் உணவின் அளவை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. வயிறு நிரம்பிய உணர்வு இல்லாததால், தேவையற்ற அளவில் சாப்பிடுகிறார்கள். இதனால் உடலில் அதிக கலோரி சேர்ந்து, செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவது வயிற்றின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. உணவுக்குப் பிறகு சோர்வாக இருந்தால், அது ஒரு எச்சரிக்கை. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் ரத்தச் சர்க்கரை மாற்றங்களை ஏற்படுத்தி, சோர்வு, எரிச்சல் போன்ற விளைவுகளை தரும்.
சரியாக நன்றாகச் சாப்பிடாமல் இருப்பதும், வேகமாக சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்தைக் குறைக்கிறது. வேகமாக சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம், பதட்டம் கூட அதிகரிக்கும். உணவை மெதுவாக ரசித்து சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிடுவதோ, மிக வேகமாக சாப்பிடுவதோ இரண்டுமே பாதிப்பே தரும். உணவின் நேர்மையான தேவையை புரிந்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
Edited by Mahendran