வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

பாதாமை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும், நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளி விடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.

உணவில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அதில் கெட்டதைக் குறைத்து நல்லதை அதிகரிக்கும்  குணம் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு. இது நமது உடல்நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது.
 
ஊறவைத்த பாதாமைச் சாப்பிட்டால் நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதேபோல் ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
 
பாதாமில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு நல்லவை. இவை வயிற்றை நிரப்பிவிடுவதால், நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடமாட்டோம், உடல் எடை (Weight)  குறையும்.
 
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது. இவற்றுடன், ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்களால் இளமைத்தோற்றம்  கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும்.
 
பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.