சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அவற்றின் பயன்களும் !!
அரிசியின் அளவை விட சிறியதாக இருக்கும் சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். உடல் சரியாக இயங்குவதற்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன.
சிறுதானியங்களை நாம் உணவாக எடுத்துகொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைக்கப் பட்டு உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. சிறுதானியங்களில் அதிக அளவு உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையைக் குணப்படுத்தும். சிறுதானியங்களில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது.
சிறுதானியங்கள் உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது.
சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் பி ஆனது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் கிரகித்து அதனை ஆற்றலாக மாற்றுகிறது.
இதயத்தமனிகளில் உள்ள உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான அளவை குறைக்கிறது.