1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:54 IST)

தலைமுடி உதிர்வை தடுத்து வளர உதவி செய்யும் சில குறிப்புகள் !!

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.


தலைமுடி உதிர்வை தடுக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.

தேங்காய் எண்ணெய், முடிக்கு இயற்கை முறையிலான கண்டிஷ்னர் என்றே சொல்லலாம். இதில் கொழுப்பு அமிலமும் இருப்பதால் தலையில் சீராகத் தேய்த்து , முடியின் நுனியையும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கலாம்.

கால்சியம் மற்றும் புரோட்டின் சத்துகள் மட்டுமல்லாது இதர ஊட்டச்சத்துகளும் தயிரில் நிறைந்துள்ளன. எனவே தயிரை அப்படியேவும் அல்லது அதோடு முட்டை வெள்ளை பகுதி சேர்த்துத் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி தலைமுடியை நன்கு அதிகரிக்க செய்கிறது இதை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யலாம். மசாஜ்ஜை ஒரு மணி நேரம் நன்றாக தலையில் ஊறவிட்டு பின்னர் காலையில் நீரை கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.