ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (09:50 IST)

சௌசௌவில் நிறைந்துள்ள சத்துக்களும் மருத்துவப்பயன்களும் !!

Chow Chow
சௌசௌ செடியின் இலைகள், காய்கள் மற்றும் விதைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்ப்பிரேதேச பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.


சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பில் சேர்த்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை சௌசௌவை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். சௌசௌவானது குடல் பாதையை சுத்தம் செய்து பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கும்.

சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. சௌசௌ நீர்ச்சத்து அதிகமுள்ள காயாகும். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.

சௌசௌவில் உள்ள வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும். வயிறு சம்மந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி சௌசௌவிற்கு உண்டு.

சௌசௌவானது நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும். சௌசௌவில் உள்ள கால்சியமானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. மேலும் சௌசௌவில் உள்ள வைட்டமின் சி, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.