புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (17:40 IST)

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் பசலைக்கீரை !!

Pasalai Keerai
பசலைக்கீரையில் மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.


பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை புதுப்பிக்கிறது. பார்வையை கூர்மை படுத்துகிறது. பசலைக் கீரை ஜீரண மண்டலத்திற்கு நல்லது.

பசலைக் கீரையை சமைக்கும்போது கீரையின் அளவைவிட பருப்பின் அளவு சற்று குறைவாகவே இருக்க
 
வேண்டும். இவ்வாறு பருப்பு சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு நீங்கும். மேலும் ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவை குணமாகும்.

பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் பைட்டோ நிட்ரி யண்ட்டுகள் மற்றும் புரோஸ்டேட் சத்துக்கள் இருக்கிறது. இது, புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

பசலைக்கீரையில் லுடின் இருப்பதால், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களை பாதுகாக்கும்.

பசலைக்கீரையில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருப்பதால், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருப்பவர்கள் பசலைக்கீரையை அடிக்கடி உணவோடு எடுத்தக் கொண்டால் அந்ந வலியினை குணப்படுத்தும்.

பசலைக்கீரையின் தண்டினை சாறு எடுத்து கற்கண்டுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு ஜீரணமாவேதோடு சளி, நீர்க்கோவை போன்றவை சரியாகும்.