1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் நாவல் பழம்...!

நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும். நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

நாவல் பழத்தின் நிறத்தை பார்க்கும் போதே நாஊறும். அத்தகைய நாவல் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பழம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.  கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.
 
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உபயோகிக்கும் மருந்துகளுடன் நாவல் கோப்பியை காலை, பிற்பகல், இரவு தேநீர், கோப்பி பாவிப்பது போன்று பாவித்து வரும்போது இரண்டு வாரங்களில் உங்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு குறைந்து காணப்படும்.
 
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
 
உள்ளூரில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படட நாவல் கோப்பியை ஒரு முறை உபயோகித்து பலன் பெறுங்கள். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
 
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும். 
 
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.