திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (11:48 IST)

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஆரஞ்சு ஜூஸ் !!

Orange
அசிடிட்டி பிரச்சனையை ஆரஞ்சு அல்லது அதன் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில், இது மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அதிகரிக்கும். மேலும்,  ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலம் உடலுக்கு அசௌகரியத்தை அதிகரிக்கும்.


ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இது பற்களின் எனாமலில் உள்ள கால்சியத்துடன் கலந்தால், பாக்டீரியா தொற்று ஏற்படலாம். துவாரம் இருக்கும் போது ஆரஞ்சு சாப்பிட்டால் பற்கள் கெட்டுவிடும். ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால், வலுவான பற்களைப் பெறலாம்.

சிட்ரஸ் பழங்களை உணவு உட்கொண்ட  உடனே ஆரஞ்சு பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது வயிற்றில் அமிலம் உருவாகுவதை அதிகரித்துவிடும். செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்கள் வயிறு நிரம்பியிருக்கும். வயிறு உப்புசம் ஏற்படாது. தயமின், ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்டவை ஆரஞ்சு பழத்தில் இருக்கின்றன.

ஆரஞ்சுப் பழங்களில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. பொதுவாக சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கொண்ட நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மருந்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரஞ்சு பழத்தில் இரும்பு சத்து இல்லாவிட்டாலும், அவற்றில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் செரிமான செயல்பாட்டின்போது இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து உட்கொண்டால் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஆரஞ்சு பழம் பயன்படுகிறது.