செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கையான முறையில் கோடைக் காலத்திற்கேற்ற குளிர்ந்த ஸ்மூத்தி...!

உடலினுள் உள்ள நச்சுக்களை நீக்கினாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு கெமிக்கல் முறை முற்றிலும்  ஒத்து வராத ஒன்று என்பதை மனதில் வைத்து கொள்ள வெண்டும். உடலின் நச்சு தன்மைகளை நீக்க இயற்கையான முறைகளை பின்பற்றுதல் அவசியம். இயற்கையான பழங்கள் காய்கறிகளை வைத்து இதை நல்ல முறையில் செய்ய முடியும். 
பழம் மற்றும் காய்களை மிருதுவாக்கி அதை வைத்தே உடலின் நச்சுக்களை நீக்க முடியும். காய் மற்றும் பழங்களை மிருதுவாக்கி அதாவது ஸ்மூத்திகளாக  செய்து உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இடைப்பட்ட உணவுகளை திட்டம் தீட்டி கொள்ள வேண்டும். இவற்றை முறையான நேரங்களில்  உட்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் பானங்களில் நிறைய உள்ளன.  அவற்றில் மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
இருப்பினும் பலரும் மில்க் ஷேக்கை மட்டும் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவர். ஆனால் உண்மையில் மில்க் ஷேக்கை விட, ஸ்மூத்தி மிகவும் சுவையுடன்  இருக்கும். சொல்லப்போனால், ஒருவிதத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக செய்வது போல் தான் இருக்கும். பொதுவாக ஸ்மூத்தி ஒரு ஆரோக்கிய மற்றும்  புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானம். 
 
பனானா ஸ்மூத்தி செய்ய:
 
ஐஸ் பால் - 2 கப்
வாழைப்பழம் - 2
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டைப் பொடி - 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு ஏற்ப 
செய்முறை: பாலில் தயிர், வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும். இறுதியாக தேன் சேர்த்து அடிக்கவும். ஒரு பெரிய டம்ளரில் இதை ஊற்றி, மேலே பட்டைப்  பொடி தூவி, ஐஸ் கட்டிகள் இட்டுப் பரிமாறவும். ஸ்மூத்தி செய்ய அவசியமானவை பொதுவாக ஸ்மூத்தி செய்ய நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகள்  மற்றும் பால் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்க முடியும். இதே முறையை பயன்படுத்தி தர்பூசணி, சப்போட்டா, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில்  செய்யலாம்.