நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்....!!
நாம் சாப்பிடக்கூடிய உணவில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் தன்மை இருந்தால் அப்படிப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோயை குணப்படுதாவிட்டால் உடலில் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.
நம் சமையலறையில் இருக்கக்கூடிய வெங்காயத்தை கொண்டு நீரிழிவு நோயை மிக எளிதில் கட்டுப்படுத்தலாம். தினமும் உணவில் வெங்காயத்தை சேர்த்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெங்காயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது. நீரிழிவு நோயின் பாதிப்பு இருப்பவர்கள் அதிகபடியாக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அரை கப் வெங்காயத்தில் 5.9 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவு மிகவும் நல்லது. வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.
வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். தொடர்ச்சியாக வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
பெரும்பாலும் சிவப்பு வெங்காயத்தை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். மதிய மற்றும் இரவு உணவுகளுடன் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். சாண்ட்விச்சில் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் நாவற்பழம், பட்டை, முட்டை, கீரைகள், விதைகள், கொட்டைகள், க்ரீக் யோகர்ட், மஞ்சள், சியா விதைகள், ப்ரோக்கலி, ஆளி விதை, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.