பொடுகு தொல்லை பிரச்சனையை முழுவதுமாக நீக்கும் இயற்கை முறையிலான டிப்ஸ்...!!

கொழுப்பு சக்தி மிகுந்த நெய், பால்,வெண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தலையில் எண்ணெய் பசைத் தன்மையை உடலில் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு தலை குளிக்கலாம்.  வேப்பிலை, துளசி இவற்றைச் சாறு எடுத்து,  தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 
வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
பொடுகு தொல்லை தீர வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலை  தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
 
நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து தலை தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலை தேய்த்து  குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
 
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
 
இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து  முடியை அலசுவதால் இவை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.


இதில் மேலும் படிக்கவும் :