வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

வெங்காயத்தில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
வெங்காயத்தில் உள்ள ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோ பாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காச நோய் வராமல் தடுக்கிறது.
 
வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலந்து விடுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும்.
 
பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. 
 
வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த சோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.
 
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோஷம் மர்றும் சலி போன்றவை பூரணமாக குணமாகும்.