1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாயு பிரச்சனைக்கு அற்புத மருந்தாகும் பெருங்காயம் !!

பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில்  பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.

உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால்  அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.
 
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல்  பிரச்சனை தீரும். 
 
வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
 
பிரசவம் ஆன தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு பின்னர் சில நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு, வாணலியில் பெருங்காயத்தை  வறுத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி, இஞ்சிச்சாறு மற்றும் பூண்டு சேர்த்து, சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால், அவர்களின் உதிரபோக்கு பாதிப்புகள் படிப்படியாக  குறையும்.
 
தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை  அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.