1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 4 மே 2022 (14:59 IST)

சிலந்தி நாயகம் மூலிகையின் மருத்துவ பயன்கள் !!

Silandhi Nayagam
சிலந்தி நாயகம் வெடிக்காய்ச் செடி எனவும் அழைக்கப்படுகிறது. இலை, பூ, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கிரந்தி நாயகத்தின் வேறு பெயர்கள் சிலந்தி நாயகம், கிரந்தி நாயகன், நாயன். இதில் இலை மட்டுமே பயன் உள்ளது.


சுவை கசப்புத் தன்மை உடையது. மருந்தாக உட்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் காணப்படும். பூக்கள் சிறியதாகவும், காம்பு நீண்டு நீள நிறத்திலும் இருக்கும். நன்றாக காய்ந்த விதைகள் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் தன்மையுடையது. இதில் உள்ள இரண்டு வகையில் வெள்ளை நிறம் சிறப்புடையது.

கிரந்தி நாயகம் நுண் புழுக்களைக் கொள்ளக்கூடிய கிருமிநாசினியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மூலிகை சீதளம், கிரந்தி, பாம்பு, விஷம், கண் நோய், உட்புண்கள், சொரி, சிரங்கு, முதலியவை தீரும்.

இலையை நீரின்றி அரைத்து நகச்சுற்றில் கட்டி வர உடைந்து இரத்தம், சீழ், முளையாவும் வெளியேறிக் குணமாகும். இலைச் சாற்றுடன் சம அளவு பாலில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரக் கட்டிகள் வராது தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புற்றுரணங்கள் குணமாகும். இரத்தச் சர்க்கரை குறையும்.

பூ, பிஞ்சு ஆகியவற்றைப் பன்னீரில் போட்டு அத்துடன் 4 அரிசி எடை பொரித்த படிகாரம் கலந்து 4 மணி நேரம் கழித்து வடிகட்டி 2 துளி ஒரு நாளைக்கு 4 முறை கண்ணில் விட கண்கோளாறு, கண்வலி, பார்வை மங்கல், கண்சிவப்பு, கூச்சம் ஆகியவை தீரும்.

சிலந்தி நாயகம் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி 25 மி.லி. பாலும் கலந்து 2 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரிழிவு நோய்க்  கட்டி குணமாகும். சிலந்தி நாயகம் இலைகள் ஐந்தாறு எடுத்து மென்று தின்ன, தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.