வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நந்தியாவட்டை!!

நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்க்கப்படுகின்றன. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.
நந்தியாவட்டை பால், வேர், ஆகியவை காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும்.
 
நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும்.
நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க வேண்டும். அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும்.
 
பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம்.
 
நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு ½ டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை  குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.