புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

காசினிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் பயன்கள்!!

காசினி கீரையில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கிதேனீருக்கு பதிலாக பருகலாம். 
காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை  உடையது.
 
உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை.
 
பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.
 
காசினிக் கீரையை பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி  வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மேலும் உடல் சூடு தணியும்.
 
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு நிழலில் உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து  தினமும் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால்  அதிக உதிரப்போக்கு குறையும்.
 
அதிக உயிர்ச்சத்து கொண்ட காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுபோட்டு கட்டிவந்தால் வெகுவிரைவில் புண்கள்  ஆறிவிடும். இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
 
காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.