வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்....!!

எருக்கின் செடியின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வளமற்ற, பராமரிக்கப் படாத நிலங்கள், வயல்கள்  சாலையோரங்கள் போன்ற இடங்களில் வளரும் தன்மை கொண்டது.

எருக்கஞ் செடியில் 2 வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நீல நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். விநாயகருக்கு பூஜிக்க உகந்ததாகவும்,  அரிதாகவும் கிடைக்க கூடிய வெள்ளை பூ செடிக்கு தான் அதிக மவுசு உள்ளது. 
 
பழுத்த எருக்கன் இலையை குதிகால் வீக்கத்தின் மீது வைத்து சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து ஒத்தடம் கொடுத்து வர குதிகால் படிப்படியாக குறைய  ஆரம்பிக்கும்.
 
எருக்கன் வேரை கரியாக்கி விளகெண்ணெய் கலந்து வெளிப்புற பயன்பாட்டிற்கு படுத்தலாம். 20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.
 
எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.
 
சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும். சித்த மருத்துவரின் அறிசுரையின் பேரில் கொடுக்கலாம்.