1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் பப்பாளி...!!

ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம்.

பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை  கட்டுப்படுத்துகிறது.
 
பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம்  பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
 
கல்லீரல் வீக்கத்திற்கு பப்பாளி மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது. தினமும் காலை  மாலை என இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம்  குணமாகிவிடும்.
 
வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூலநோயால் ஏற்படும் பிரச்சனைகள்  குணமாகிவிடும். 
 
பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
 
பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம்  தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.
 
பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.
 
பப்பாளிபழம் சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு,  அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.
 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள்,உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது.