வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் நெய்...!!

நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.

தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது.
 
நெய்யில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. நெய்யில் சங்கிலி தொடர்பான கொழுப்பு அமிலங்கள் அதிகம்  நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக  மாற்றுகிறது.
 
நெய்யில் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. 
 
வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது. எனவே வயிறு மற்றும் குடல்களை வலுப்பெறச் செய்து உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
 
நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின்  நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.
 
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என  பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
 
தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில்  தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.
 
உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும்.