வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள் !!

வெந்தயத்தை தண்ணீரில் இரவு ஊறவைத்து, காலையில் அந்நீரை அருந்திவந்தால் உடல் வெப்பமடைவதைத் தடுக்கலாம்.


தேன், கல்கண்டு, ரோஜா  இதழ்கள்ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும்குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
 
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் உண்டு. இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும், பித்தம் போகும், பசியைத் தூண்டும்.

மாதுளம்பழச்சாற்றில்  கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டுநோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.
 
நல்லெண்ணெய்யையும், அகத்திக்கீரைச் சாற்றையும் சம அளவு கலந்து அடுப்பிலேற்றி, பாலில் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து தைலம் பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு தலைமுழுகிவந்தால் சகல சூடும் தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
 
சோற்றுக் கற்றாழையைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் குளிக்க உடல் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோகலந்து சாப்பிட குடல் சூடு, மூலம், உடல் எரிச்சல் குறையும்.