திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ குணங்கள் நிறைந்த மருத மரப்பட்டைகள் !!

மருத மரத்தின் பட்டைகள் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. மருதம் பட்டையை நாம் உபயோகப்படுத்தினால் எந்தெந்த நோய்களிலிருந்து விடுபடலாம் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியான தேதிகளில் வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மருதம் இலைகளை காயவைத்து சூரணமாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.
 
மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீர மருதம் பட்டை, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பெருங்காயம் சேர்த்து காலை  மற்றும் மாலை மோருடன் கலந்து பருகி வர, மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீரும்.
 
வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப்புண் குணமாகும்.
 
மருதம் பட்டை பொடி, சீரகம் இரண்டையும் சம அலவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் தணியும். மருதம் பட்டை பொடி, நெல்லிக்காய் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து 1 ஸ்பூன் சாப்பிட்டால் பித்தம், மயக்கம் தெளியும்.
 
மருதம் பட்டை பொடி, கடல் அழிஞ்சில் பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து 2 கிராம் அளவு எடுத்து மூன்று வேளை உணவுக்குபின் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
 
மருதம் பட்டை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு அதிகாலையில் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.
 
ஒரு சுத்தமான டம்ளரில் மிதமான சூட்டில் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் தூக்கம் வர பானம் தயார். இந்த பானத்தை இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்  அருந்தவேண்டும்.