செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2025 (19:07 IST)

8 வடிவ எண்களில் வாக்கிங் செல்வது நன்மையா?

8 shape walking
கடந்த சில வருடங்களாக 8 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வடிவத்தில் வாக்கிங் செல்பவர்களுக்கு இடுப்பு, வயிறு, கால்களில் இருக்கும் தசைகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த உடல் வலிமை தரும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
இன்ஃபினிட்டி வாக்கிங் என்று கூறப்படும் இந்த 8 வடிவ வாக்கிங் செல்லும்போது எடை குறைதல், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருதல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், இளமையான தோற்றம் ஆகிய பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
 
 மேலும் மன அழுத்தம் குறையும் என்றும் மூட்டுகளுக்கு வலி சேர்க்கும் என்றும் 8 வடிவில் நடக்கும் போது பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வளைந்து வளைந்து நடப்பதால் நடக்கும் திசை மாறி வெவ்வேறு திசைகளில் இருந்து எலும்புகள் மற்றும் தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மருத்துவரை கலந்த ஆலோசித்துவிட்டு தான் 8 போன்ற வடிவில் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran