ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான பல விட்டமின்களை கொண்ட மாம்பழம்...!!

அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம். கோடைகாலத்தில் அதிகம் சுவையான பழங்கள் கிடைத்தாலும் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழம் தான். அதுவும் மாம்பழத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் நாவிலிருந்து எச்சில் ஊறும். பொதுவாக மாம்பழங்கள் பல வகைகளில்  இருக்கின்றது.

மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது மற்றும் மாம்பழம் அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.
 
மாம்பழம் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பதை மிகச் சிலருக்குத் தெரியும். உண்மையில், மா பழத்தின் சாறில்  கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இந்த எல்லா நன்மைகளாலும், மாம்பழம் புற்றுநோயின் அபாயத்தை  குறைக்கிறது.
 
மாம்பழத்தை உட்கொள்வது இதய நோய் அபாயத்தையும் குறைக்கும் என்பதை மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். உண்மையில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
 
கொழுப்பின் அபாயத்தைத் தவிர்க்க வேண்டியவர்கள், மாம்பழங்களை சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள நியூட்ராசூட்டிகல் கொழுப்பின் அளவைக் குறைக்க  உதவுகிறது.

மாம்பழங்களை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளையும் போக்கலாம். உண்மையில் மாம்பழங்களுக்கு மலமிளக்கியான அதாவது வயிற்று சுத்திகரிப்பு பண்புகள்  உள்ளன. அதை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாது.
 
உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.
 
நலம் நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல்  போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது.