எல்லா இடங்களிலும் கிடைக்கும் கீழாநெல்லி மூலிகையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!
கீழாநெல்லி பல்வேறு நோய்கள் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டதாகும்.
இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். ஆனால் லேசான கசப்பு சுவை கொண்டது.
கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி, இளஞ்சியம், அவகதவாய், கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி போன்ற பல பெயர்களால் கீழாநெல்லி அழைக்கபடுகிறது.
கீழாநெல்லி இலை சிறிது எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, ரத்த சோகை குணமாகும். மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கீழாநெல்லி இலையுடன் மாதுளம்பழம், நாவல் கொழுந்து இலை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை குணமாகும்.