பல்வேறு நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் வல்லாரை !!
வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால் இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கபடுகிறது. வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால் இத்தாவரம், கீரை இனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரியான அளவில் கொண்டுள்ளது. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துகிறது.
நல்ல ஞாபசக்தி உண்டாக வல்லாரை இலையுடன் அரிசி, திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபசக்தி உண்டாகும்.
சிறிது கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், அதே அளவு மணத்தக்காளி கீரையையும் எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் முற்றிலும் குணமாகும்.