சுரைக்காயின் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
மருத்துவ பயன்களை அள்ளித்தரும்பல்வேறு மருத்துவ பயன்களையும் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தரும்.
வைட்டமின் பி மற்றும் சி சத்து மிகுந்து காணப்படும் இக்காய் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிப்பது மட்டுமன்றி பற்களில் ஏற்படும் ஸ்கர்வி போன்ற நோய்களை குணமாக்கும் மருத்துவ ஆற்றல் கொண்டது.
இரும்பு சத்தை அளித்து எலும்புகளை வலுவூட்டுகிறது. நீர் சத்தை அதிகரித்து உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்தையும், தாய்மார்களின் தாய்ப்பால் கொடுக்கும் சக்தியையும் அளிக்கிறது.
சருமப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கை கால்களில் எரிச்சல் உள்ள இடங்களில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.
நீரழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் மூலம் வெளியாகிறது. மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தத்தை சமநிலையில் வைக்க முடியும்.
சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் சிறுநீரக கோளாறுகள் சரியாகும்.