1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (16:47 IST)

சில பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Natural Medicine
கருப்பட்டியோடு வெள்ளைப்பூண்டு சேர்த்து சாப்பிட்டு வருவதனால் இடுப்பு வலி குணமாகும்.


தலையில் பேன் தொல்லை அதிகம் உள்ளவர்கள், மலைவேம்பு இலையை அரைத்து தலையில் தேய்த்துவந்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தலைமுடி ஆரோக்கியமானதாகவும், அடர்த்தியானதாகவும் இருக்க, தேங்காய் எண்ணெயில் அரைத்த கருவேப்பிலையை  சேர்த்து தலையில் தேய்க்கவும்.

சீயக்காயுடன் இடித்த ரோஜா இலைகளை  சேர்த்து உங்களது தலையில் தேய்த்து குளிப்பதனால் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சியாகும்.

இரும்புச்சத்து அதிகமுள்ள நாவல் பழத்தை கிடைக்கும் காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களது உடல் பலம் பெறும்.

கற்கண்டு மற்றும் துளசி சாற்றினை சாப்பிட்டால் வாந்தி பிரச்சனை சரியாகும். பாலில் பேரிச்சம் பழத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுவருவதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

வயிற்றில் தொப்பை உள்ளவர்கள் சுரைக்காயை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் தொப்பை குறையும்.

தூக்கமின்மை பிரச்சினை உடையவர்கள் வேப்ப இலை சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து சாப்பிட்டால் தூக்கமின்மை நீங்கி ஆழ்ந்த தூக்கம் உண்டாகும்.

கமலா ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்றாக காய வைத்து, அதனை பொடியாக்கி தினந்தோறும் சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்தி வந்தால் பல விதமான சரும பிரச்சனைகளும் குணமாகும்.