1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (14:01 IST)

அஜீரண கோளாறுகளை குணமாக்கும் அற்புத மருந்து இஞ்சி !!

Ginger
இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வாந்தியை சமாளிக்கும் ஆற்றலையும் தரவல்லது இஞ்சி.


இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது. ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வராது.

இஞ்சி, உப்பு, சீரகம் மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்துச் சாப்பிட்டு சுடுநீர் குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்.

இஞ்சி, மாங்காய் இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் இழுப்பு, காய்ச்சல், விக்கல் ஆகியவை குணமாகும்.

இஞ்சியைக் காயவைத்துப் பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவினால் தலைபாரம், ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

இஞ்சிச் சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைவலி குணமாகும்.

இஞ்சி போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரில் குளித்தால் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் உடைந்து குணம் கிடைக்கும்.

இஞ்சியைத் தோல் நீக்கி, உப்பைத் தொட்டுச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.