வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (17:38 IST)

கொண்டைக்கடலையில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரிந்துக்கொள்வோம் !!

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அவை ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து ரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து உடல் ஆற்றலை அதிகரிக்கும்.


கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை நிற கொண்டைக்கடலை. மற்றொன்று கருப்பு நிற கொண்டைக்கடலை.

கொண்டைக்கடலையில் புரதம், மாவுச்சத்து, போலிக் ஆசிட், நார்ச்சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகம் உள்ளது.

கொண்டைக்கடலையில் ஏராளமான நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டு வந்தால் வயிற்று பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுப்பாடுடன் இருக்கும். கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவை உடல் எடை குறைய உதவி செய்கிறது. அதிலும், இதனை தினமும் அரை கப் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு நிறைவதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.