வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (15:43 IST)

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சீத்தாப்பழம் !!

சீத்தாப்பழத்தில் உள்ள குளுகோஸ், சுக்ரோஸ் ஆகிய இரண்டும் அதிக அளவில் இருப்பதன் காரணமாக உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது.


சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய இரண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்ய ஊக்குவிக்கின்றது. ரத்த அழுத்தமானது சீராக்கி இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. சீத்தாப்பழத்தை உயர் ரத்த அழுத்தம் குறைந்த ரத்த அழுத்தம் உள்ள இருபாலரும் தாரளமாக சாப்பிடலாம்.

சீத்தாப்பழம் உடலுக்கு நன்கு வலிமையை தரக்கூடியது. இதில் கால்சியம் நிறைந்திருக்கும் காரணத்தினால் எலும்புகள் பற்கள் பலமடையும்.

தசைப்பிடிப்பு ஏதேனும் இருந்தால் சீத்தாப்பழம் சாப்பிடுவதன் மூலமாக தசைப்பிடிப்புகள் சரியாகி தசைகள் வலிமையாகும்.

சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்துக்கள் நிரம்பியுள்ள காரணத்தினால் சீத்தாப்பழம் உடல் எடையை சீராக அதிகரிக்கின்றது.