1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (12:09 IST)

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புத்துணர்ச்சியை தரும் லெமன் டீ !!

செரிமானமாவதற்கு லெமன் டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத கண்டகண்ட உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை வலுவாக்குகிறது.


லெமன் டீயைக் குடிப்பதால் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியான சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன.

லெமன் டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாக்கிறது.

லெமன் டீ தயாரிக்க: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அரை டீஸ்பூன் அளவிற்கு டீ தூள் போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும் சமயத்தில் கருப்பட்டி, நாட்டு சர்க்கரை சேர்த்து கரைய விடுங்கள். அதன் பிறகு இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி பருகவும்.