புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொய்யாவில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

கொய்யாப் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே கொய்யா கிடைக்கும் காலங்களில் தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. கொய்யாவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி காணலாம்.
கொய்யாப் பழமானது உண்மையில் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த எளிய பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே  மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) அதிக அளவில் கொண்டுள்ளது.
 
உணவில் அதிக அளவில் கொய்யாப் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செர்க்கப்படும் பழங்களில் முக்கியமான  இடத்தினைப் பிடிப்பது கொய்யாப் பழம் ஆகும். கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது என்பது  முற்றிலும் உண்மை.
 
ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’ அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ யினை கொய்யாப் பழம்  கொண்டுள்ளது.
 
வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும்  பாதுகாக்கிறது.
 
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில்  லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.
 
கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு  ஒழுங்கு படுத்தப்படுகிறது.