புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அருகம் புல்லின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
 
* வயிற்றுப் புண் குணமாகும். இரத்த அழுத்தம் குணமாகும்.
 
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
 
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.
 
* புற்று நோய்க்கு நல்ல மருந்து. உடல் இளைக்க உதவும்
 
* இரவில் நல்ல தூக்கம் வரும். பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
 
* மூட்டு வலி நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.