1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (11:42 IST)

எண்ணில் அடங்காத மருத்துவ குணங்களை கொண்டுள்ள குப்பைமேனி மூலிகை !!

குப்பைமேனி இலை சாற்றை காச்சிய பாலில் கலந்து குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்குவதுடன் மலச்சிக்கலும் நீங்கும்.


அனைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு குப்பைமேனி இலை சிறந்த தீர்வாகும்.

தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

குப்பைமேனி இலைகளை காய வைத்து நன்றாக காயவைத்து பொடி ஆக்கிக்கொண்டு அதில் சிறிது நெய் சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகை மூலமும் குணமாகும். அதே போன்று குப்பைமேனி இலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து மலவாய் வழியாக உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும்.

படுக்கை புண் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை விளக்குஎண்ணையில் சேர்த்து காய்ச்சி படுக்கை புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் படுக்கை புண் ஆறும்.
உடல் ஆரோக்கியம்

பத்து குப்பைமேனி இலைகளை பசும்பாலில் சேர்த்து வேகவைத்து குடித்து வந்தால் உடல் அழகும் ஆரோக்கியமும் பெரும்.

குப்பைமேனி இலை சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் அருந்துவதால் இரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.