1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (17:56 IST)

தோல் நோய்களை குணப்படுத்த உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Diseases
முருங்கை இலையை பறித்து அதில் இருந்து நன்கு சாறு பிழிந்து அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து படை இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு வேலை தடை வந்தால் படை குணமாகும்.


வெற்றிலை மற்றும் துளசி இலையை சேர்த்து நன்கு அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் தேமல் நீங்கும்.

உடலில் உள்ள அரிப்பு மற்றும் தடிப்புகள் சரியாக தினமும் காலை மாலை என இரு வேலையும் கருந்துளசியோடு 3 மிளகு சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் தடிப்பு சரியாகும்.

கீழாநெல்லி மற்றும் கொத்துமல்லி இலை ஆகிய இரண்டையும் பால் விட்டு அரைத்து தேம்பல் இருக்கும் இடங்களில் பூசி பதினைந்து முதல் 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

கீழாநெல்லி இலையை நன்கு அரைத்து உடலில் எங்கெல்லாம் அரிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொண்டு 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அரிப்பு சரியாகும்.