செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பாதாம் பிசினின் அற்புத மருத்துவ நன்மைகள்....!!

பாதாம் பருப்பு மரம் அல்லது வாதுமை மரத்தில் இருந்து கிடைக்கின்ற பாதாம் பருப்பை போலவே, அதிலிருந்து கிடைக்கும் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவையாகும்.

சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று  ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.
 
பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும். தாதுக்கள் அதிகமுள்ள பாதம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர  உடலின் தாது தேவை பூர்த்தியாகும்.
 
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட  விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.
 
ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு  போன்றவை நீங்கும்.
 
தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.