1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் கொள்ளு !!

கொள்ளு என்பது ஒரு அற்புதமான உணவாகும். முக்கியமாக இதனை குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக விளங்குகின்றது. இதற்கு கரணம் கொள்ளு உண்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.

கொள்ளில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
 
தினமும் கொள்ளினை உண்டு வந்தால் உங்கள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைக்கப்பட்டு இருதய ஆரோக்கியம் மேம்படும்.
 
மலசிக்கல் பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நார்ச்சத்து குறைபாடு ஆகும். கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது உங்களுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
 
இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து உங்களின் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். மேலும் நீரிழிவு போன்ற நோய் ஏற்படாமல் காக்கும்.
 
கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும். கால்சியம் ஆக்சாலேட் என்பதே சிறுநீரக கற்கள் ஆகும். இதனை உடைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு.
 
கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களின் தசைகளின் வலிமை அதிகரிக்கும் மேலும் ஆரோக்கியமான தசைகள் கிடைக்கும்.