திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (10:44 IST)

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் ஸ்வீட் பிரியாணி!

ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கியுள்ள ஸ்வீட் பிரியாணி குறும்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள உள்ளது.

ஊடகவியலாளர் ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கத்தில் பிராங்க் நடிகர் சரித்திரன் நடித்திருந்த குறும்படம் ஸ்வீட் பிரியாணி. டெலிவரி பாய் ஒருவர் பற்றிய கதையாக வெளியான இந்த குறும்படம் வெளியீட்டின் போதே கவனம் ஈர்த்தது. இப்போது வலைப்பேச்சு ஓடிடி தளத்தில் இந்த குறும்படம் காணக்கிடைக்கிறது.

இந்நிலையில் வரும் 20 முதல் 25 ஆம் தேதி வரை நடக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்த குறும்படம் தேர்வாகியுள்ளது. இதோடு தமிழ் திரைப்படமான கூழாங்கல் திரைப்படமும் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.