1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்னாசிப்பழத்தை தினசரி உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !!

அன்னாசி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி சருமத்திற்கு நன்மை பயக்கிறது. 

அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இது தோல் வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது. 
 
அன்னாசிப்பழத்தை உட்கொள்வதன் மூலம், முடி உதிர்தலைத் தடுக்க முடிகிறது. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை முடி உதிர்வதைத் தடுக்கிறது. 
 
அன்னாசி பழம் என்பது சளி மற்றும் இருமலைத் தடுக்க உதவும் ஒரு பழமாகும். அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது சளி மற்றும் இருமலை நீக்குகிறது. 
 
அன்னாசிப்பழத்தின் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது இதயத்தை பாதுகாக்கிறது.
 
அன்னாசிப்பழத்தை தினசரி உட்கொள்ள வேண்டும். அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது.