1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Karupatti helps to keep the body healthy !!

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கருப்பட்டி !!

கருப்பட்டி
கருப்பட்டி செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கிறது. இது செரிமானத்திற்கு தேவைப்படும் நொதிகளை செயல்படுத்துவதை துரிதப்படுத்துகிறது. மேலும் குடல் பாதைகளை சுத்தப்படுத்துவதில் உதவுகிறது.


கருப்பட்டி சுவாசப் பாதை, குடல், உணவுக் குழாய், நுரையீரல் மற்றும் வயிறு ஆகிய உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  .

கருப்பட்டியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளைப் போக்க உதவுகிறது. இது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் குடல் இயக்கத்தை தூண்டுகிறது.

கருப்பட்டியில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளதால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது எலும்புகளை பலப்படுத்துவதால் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு தொடர்புடைய பிரச்சனைகளை குறைக்கிறது.

கருப்பட்டியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.

கருப்பட்டி இருமல் மற்றும் சளி மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பனை வெல்லம் சளியை கரைத்து சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுவதாக நம்பப் படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம்.

கருப்பட்டி இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தினமும் குறைந்த அளவில் தொடர்ந்து கருப்பட்டி சாப்பிடுவது இரத்தம் சுத்திகரிக்க எளிய வழி ஆகும். மேலும் இது இரத்தக் கோளாறுகளைத் தடுக்கிறது மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

கருப்பட்டியில் கனிசமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களால் உள்ளன. எனவே கருப்படி செல்களை சேதப் படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
மருத்துவ குணங்கள் வாய்ந்த ஆமணக்கு எண்ணெய் !!