1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 30 மே 2022 (15:06 IST)

எலுமிச்சம் பழச்சாற்றை அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் !!

Lemon
எலுமிச்சை இயற்கையாகவே ஆண்டி-பாக்டீரியல் தன்மையை கொண்டிருக்கின்றது. அதனால் இது உடலில் பாக்டீரியாக்களையும், வைரஸ் தொற்றுக்களையும் நீண்ட நாட்களுக்கு வேலை செய்ய விடுவதில்லை.


எலுமிச்சையில் இருக்கும் அசிடிக் அமிலம் பற்களில் தங்கியிருக்கும் கிருமிகளை வெளியேற்றி, பற்களை தூய்மையாக வைக்கும். தொண்டை கரகரப்பு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சலுக்கு, சுடு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து தேன் கலந்து ஒரு நாளைக்கு இருமுறை குடித்து வந்தால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

வெந்நீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்து வர தொண்டை அழற்சி நீங்கும். எலுமிச்சையில் 22 வகையான ஆண்டி-கேன்சர் தொகுப்பாக உள்ளடங்கியுள்ளது. இது கேன்சர் கட்டிகள் முதல் கேன்சர் செல்கள் வரை அழிக்கும் என சொல்லப்படுகிறது.

வயிற்று உபாதைகளை சரிசெய்து மலச்சிக்கல் வராமலும் தடுக்கும். மலச்சிக்கல் ஏற்படும்போது, சுடு நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் பிரச்சனை நீங்கும். அதோடு சிறுநீரக கல் ஏற்படாமலும் தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் காப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய வழி வகை செய்கிறது.