வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:12 IST)

முருங்கைக்காயை சாப்பிடுவதால் இத்தனை அற்புத நன்மைகள் உள்ளதா...?

Drumstick
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. மேலும் ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.


முருங்கைக்காயில் தாதுஉப்புக்கான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும். மேலும் மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.

முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது. முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.