1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் கருஞ்சீரகம்...!!

கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். சூதகக்கட்டு, சூதகச்சூலை போன்றவற்றுக்கு 1 கிராம் அல்லது 3 கிராம் அளவில் கொடுக்கலாம்.

* கருஞ்சீரகத்தோடு ஆற்று தும்மட்டிச் சாறு விட்டரைத்து இருபக்க விலாப் பகுதிகளிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் நீங்கும். நொச்சி குடிநீருடன் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொடுக்க மேகப்பிடிப்பு, சுரம், விட்டுவிட்டு வருகிற சுரம் தணியும்.
 
* கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதோடு காடி விட்டரைத்து படைகளுக்கும் பூசலாம். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும்.
 
* கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
* கருஞ்சீரகத்தின் தீநீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும், பூசினாலும் பயத்தால் உண்டாகும் தலைநோய், மூக்குநீர் வடிதல், நரம்பைப் பற்றியுள்ள வலி, இடுப்புவலி  போன்றவை தீரும்.
 
* கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும். சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டரைத்து முகத்தில் பூசி, ஊறிய பின்  கழுவிவர முகப்பரு மறையும்.
 
* கருஞ்சீரகம் வறுத்து தூளாக்கி எண்ணெய்யில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால்  ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.