வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் ஒரு பழம் உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள்...!!

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது. உடலின் ஆரோக்கியத்தை  பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து, நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை  சேர்த்துக்கொள்வது நல்லது. 
 
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேறும்.  இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
 
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது, உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப்  போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடுவது ஆய்வில்  தெரியவந்துள்ளது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
 
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக  கிடைக்கும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வெறும் வயிற்றில் பழம் சாப்பிட்டால், ஆயுள் கூடும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆற்றல், மகிழ்ச்சி கிடைப்பதுடன் உடல் பருமன் அடையாது.
 
பழ ஜூஸ் குடிப்பதாக இருந்தால் பிரஷ்ஷாக குடியுங்கள். புட்டியில் அடைக்கப்பட்டது வேண்டாம். மெதுவாக உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். வேகவைத்த பழத்தையும் தவிர்க்கலாம். இதில் சத்து போய்விடும்.