புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இஞ்சி டீயை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!!

ஒரு நாளின் எந்த நேரத்திலும் இஞ்சி டீயை குடிக்கலாம். நீங்கள் வெறும் வயிற்றிலும் இந்த டீயை குடிக்கலாம். உடற்பயிற்சியின் போதும் குடிக்கலாம். 

இஞ்சி புதிதாக கொழுப்பு செல்கள் உருவாவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும், எல்.டி.ல் எனப்படும் கெட்ட கொழுப்பையும், ட்ரை  கிளேசிரைட்களையும் குறைக்க உதவுகிறது.
 
இஞ்சி டீ வயிற்றில் சுரக்கும் பித்த நீர் அளவை அதிகரிக்க உதவும். பித்த நீர் என்பது கொழுப்பை கரைக்கவல்ல திரவம். அதனால் நம் உடல் எடை குறைய  உதவும். 
 
இஞ்சி டீ உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால், வீக்கங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை  மாற்றங்களை அதிகரிக்க உதவுவதுடன் கொழுப்பை இயற்கையாகவும், விரைவாகவும் குறைக்க உதவுகிறது.
 
இஞ்சி செரேடேனின் அளவை அதிகப்படுத்துவதால், செரேடேனின் பசியை தூண்டும் நரம்பு சமிஞ்சைகளுக்கு காரணமாகி பசியை கட்டுப்படுத்தி, பசியின்மை ஏற்படுத்தும். இதனால் குறைந்த அளவு உணவு உட்கொள்ள இஞ்சி உதவுகிறது.
 
கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து கல்லீரலை நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த டீ  நல்ல தீர்வாகிறது.
 
இரைப்பை, குடல் வலி நீக்கும் தன்மை இருப்பதால் வயிறு உப்புசம், அஜிரண கோளாறுகளுக்கு மருந்தாவதுடன், வாயு வெளியேற்றத்திற்கும் உதவுகிறது.
 
இதில் விட்டமின் சி, நியாசின், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் தேவையான அளவு இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இருமலுக்கும் சளிகோழைகட்டு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாகிறது.