வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்துமா...?

ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனையை  ஏற்படுத்தும். 


ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 
உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
 
மிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது.  அது காதிரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
 
பெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும்,  அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும்.
 
உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய  வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 
மிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.
 
முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பான்ஜ் கவர், ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பான்ஜ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுள்வது நல்லது.