1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலையை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா....!!

தினமும் நிலக்கடலையை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நம் உடல் தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு தேவையான புரதச் சத்துகள் கிடைக்கும்.

நிலக்கடலையில் கால்சியம் மற்றும் வைடமன் டி- உள்ளதால், தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அடையும். இதனால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 
நிலக்கடலையில் உள்ள நார் சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளும் தினமும் தாராளமாக ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடலாம்.
 
பெண்களைப் பொறுத்தவரையில் நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் இனப்பெருக்கம் சிறப்பாக நடைபெறும். இதனால் குழந்தைப் பேற்றில் தடை இருக்காது.
 
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாதம் பருப்பினை விட நிலக்கடலையில் தான் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாகவே உள்ளது.
 
ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். அதுமட்டுமல்ல நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கருப்பை சீராக செயல்படுவதோடு கருப்பை கட்டிகள் நீர்க்கட்டிகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.
 
தினமும் நிலக்கடலை சாப்பிடுவதால் நபர்களுக்கு மூளையின் செயல் திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. காரணம் நிலக்கடலையில் உள்ள பல வேதிப்பொருள் உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்கு தடை இல்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது. இதில் உள்ள வைடமன் பி 3 மற்றும் நியாசின் வலுவான ஞாபகசக்தியும் கொடுக்கிறது.