1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (13:01 IST)

தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா...?

பூண்டில் அழற்சி எதிர்ப்பு குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது. அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த பூண்டு உதவுகிறது.


பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும். ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.

இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும்.

Edited by Sasikala