1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. In Sweet lemon fruit Nutrients and its uses...!

சாத்துக்குடி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!

சாத்துக்குடி பழம்
சாத்துக்குடி பழத்தில் அபரிமிதமான வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.
நார்சத்து சாத்துக்குடியில் நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கவும் உதவுகின்றன. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான  தோற்றம் ஏற்படுபடுவதையும் தடுக்கிறது. 
 
சாத்துக்குடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான  நன்மைகளை பெறமுடியும்.
 
உடலில் புதிய இரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துக்குடி பழச்சாறு அருந்த வேண்டும். உடல் அசதி போகும். அதனால் தான் நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி  ஜூஸ் அருந்த தரப்படுகிறது. 
 
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் சாத்துக்குடி சிறப்புற செயல்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்களும் தினசரி சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம்.
 
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துக்குடி ஜூஸ்  அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர்.
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. நமது ஞாபகதிறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை  செய்யும். அத்துடன் ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்...?