திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தானியங்களில் உள்ள சத்துகளும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்...!

உடலுக்குச் சக்தியை அளிக்கக்கூடிய புரதம் நிறைந்த உணவுகள் தான் நமது தானியங்கள். நவதானியங்கள் என்பது பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள் அதாவது சூரியன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான ஞாயிறு அன்று உடலுக்கு வெப்பத்தினை அளிக்கக்கூடிய கோதுமையை வகுத்துள்ளனர்.
சந்திரன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான திங்களன்று அரிசியை வகுத்தனர். உடலில் உள்ள சீரான ரத்தச் சுழற்சிக்கு சிவப்பு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய்க்கிழமை சிவப்பு தானியமான முழு துவரையும் புத்தி கூர்மைக்கு புதனன்று பாசிப்பயறையும் வலமான தேகத்துக்கு வியாழக்கிழமையன்று கொண்டைக்கடலையும் உடலின் இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்காக வெள்ளி ஆட்சி பெற்றிருக்கும் நாளில் மொச்சையும் உடலுக்கான கடின உறுப்பு பலப்பல சத்துக்களைக் கொண்ட எள்ளினை சனிக்கிழமைக்கும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியமான சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு கொள்ளும்  கருப்பு உளுந்தினையும் வகுத்தனர்.
 
தானியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினையும் உடலின் திரவ ஓட்டத்தினையும் மன ஆரோக்கியத்தினை செம்மையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவற்றினை வெறுமனே சுண்டலாகவும் உருண்டையாகவும் செய்வதற்கு பதில் அவற்றை ஊறவைத்த பின் முளை கட்டி சுண்டலாகத் தயாரிப்பது மேலும் அதன் சத்துக்களைக் கூட்டிக் கொடுக்கிறது. புரதச்சத்து உடலில் விரைவாகச் சேர ஏதுவாகும்.
 
கோதுமையில் புரதம் சுண்ணாம்பு பாஸ்பரஸ் இரும்பு கரோடீன் நியாசின் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. உமியிலிருந்து தவிடு நீக்காத அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம் நார்ச்சத்து வைட்டமின் சத்துக்கள் அரிசியில் நிறைந்துள்ளன.
 
கொண்டைக்கடலை மொச்சை கொள்ளு கருப்பு உளுந்து பாசிப்பயறு துவரை ஆகியவற்றில் தாது உப்புக்கள் நார்ச்சத்து கால்சிய பாஸ்பரஸ் இரும்புச்சத்து புரதம் என அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளன.
 
எள்ளின் விதையில் உடலுக்கு தேவையான கால்சியம் இரும்பு வைட்டமின் பி1  வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு  வன்மையும் குருதிப்பெருக்கையும் உண்டாக்கும். இதனை உருண்டையாகவும் தயாரித்து நவராத்திரி விழாவில் அளிப்பதுண்டு.
 
நவகிரகங்களுக்கு ஏற்ற நவதானியங்கள் மட்டுமல்லாது இன்று பல நாட்டு தானியங்களும் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. அவற்றிலும் நார்ச்சத்து வைட்டமின் தாது உப்புக்களுடன் தேவையான புரதச்சத்தும் அதிகம் உள்ளது.